தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க சித்த மருத்துவம் சொன்ன அற்புதமான எண்ணெய்கள்..!


தலை முடியை ஸ்டைலாக பராமரிப்பதற்காக பயன்படுத்தும் சூடு அதிகம் உள்ள கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதால், தலை முடி மெலிதாகவும் உடையவும் வாய்ப்புகள் உண்டாகிறது. இத்தகைய முடிகள் ஆரோக்கியத்தை இழந்து, பார்க்க அசிங்கமாக மாறுகிறது. இத்தகைய தொந்தரவுகள் இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றன. இவற்றை சரி செய்து, தலை முடி வளர்ச்சியை அதிகமாக்க, வெகு சில வழிகள் மட்டுமே உள்ளன. அவற்றுள் ஒன்று எண்ணெய் பயன்பாடு.

தற்போது தலை முடி பராமரிப்பில், எண்ணெய்களின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. முடி வளர்ச்சியை அதிகரிக்க சில எண்ணெய்கள் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கூறுகள் இந்த எண்ணெய்களில் அதிகமாக உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க எண்ணெய்களின் கலவையை பயன்படுத்தும்போது அதன் விளைவுகளும் நேர்மறையாக இருக்கும். ஆகவே இன்றைய நமது பதிவில், எந்த எண்ணெய்களை கலந்து தலை முடியில் தடவுவதால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை நாம் பார்க்கப் போகிறோம். தொடர்ந்து படித்து, முயற்சித்து பாருங்கள் .


தேவையான பொருட்கள்:

லவேண்டர் எண்ணெய் – 5 துளிகள்

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

மேலே குறிபிட்ட 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் ஷம்பூவால் தலை முடியை தேய்த்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.. ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் முடி விரைவில் அடர்த்தியாகும்.


தேவையான பொருட்கள்:

ஜோஜோபா எண்ணெய் – 5 துளிகள்

ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது :

ஒரு சிறிய கிண்ணத்தில் மேலே கூறிய 2 எண்ணெயையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவை தயாரானவுடன், உங்கள் உச்சந்தலையில் அதனை தடவவும். பின்பு 15 நிமிடங்கள் ஊற விடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் தலை அலசவும். ஒவ்வொரு வாரத்திலும் 2 முறை இந்த கலவையை பயன்படுத்தி தலையை அலசி வந்தால், விரைவில் அழகான கூந்தலை பெறலாம்.


தேவையான பொருட்கள்:

தேவதாரு கட்டை எண்ணெய் (செடர்வுட் எண்ணெய்) – 6 துளிகள்

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது :

மேலே கூறிய 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலையில் மென்மையாக தடவவும். 10 நிமிடங்கள் கழித்து ஷம்பூவால் தலையை அலசவும். வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்துவதால் அழகான அலை போன்ற முடி உங்களுக்கு கிடைக்கும்.


தேவையான பொருட்கள் :

புதினா எண்ணெய் – 4 துளிகள்

பாதாம் எண்ணெய் – 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

பாதாம் எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய்யை ஒரு கிண்ணத்தில் கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மென்மையாக தடவவும். 15 நிமிடங்கள் எண்ணெய் நன்றாக தலையில் ஊறியவுடன் வெந்நீரால் தலையை அலசவும். ஒரு மாதத்தில் 3 முறை, இவ்வாறு செய்து வருவதால் உங்கள் தலை முடி வளர்ச்சி அதிகரித்து, முடியின் அடர்த்தி அதிகமாகும்.


தேவையான பொருட்கள் :

டீ ட்ரீ எண்ணெய் – 7 துளிகள்

கற்றாழை ஜெல் – 3 ஸ்பூன்

பன்னீர் – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை மென்மையாக தடவவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பின்பு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஷம்பூவால் தலையை அலசவும். ஒரு மாதத்தில் 2 முறை இப்படி செய்து வருவதால் உங்கள் முடி அடர்த்தி அதிகமாகி, வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

ரோஸ்மேரி எண்ணெய் – 5 துளிகள்

முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

மேலே கூறிய எல்லா மூலபோருட்களையும் ஒன்றாக கலந்து அந்த கலவையை தலையில் தடவவும். 20 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், தலையை ஷம்பூவால் அலசவும். மாதத்திற்கு 2 முறை இந்த ரெசிபியை பின்பற்றலாம். இதனால் விரைவில் அழகான மென்மையான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.-Source: tamil.boldsky

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05