40-வது திருமண நாள்… கண்காட்சியில் இளவரசி டயானாவின் திருமண உடை!

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கும், டயானாவுக்கும் 1981-ம் ஆண்டு, ஜூலை 29-ந் தேதி லண்டன் செயின்ட் பால் தேவாலயத்தில் திருமணம் நடந்தது. உலகமே வியந்து பார்த்த திருமணம் இது.

1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி டயானா விபத்தில் பரிதாபமாக பலியானார்.

டயானாவின் 40-வது திருமண நாள் வர உள்ளது. இந்த தருணத்தில் அவர் திருமணத்தின் போது அணிந்திருந்த உடை, அங்குள்ள கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கண்காட்சி அமைப்பாளர்கள் கூறும்போது, “இளவரசி டயானாஅணிந்திருந்த திருமண உடை, திருமண வரலாற்றில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்” என குறிப்பிட்டனர்.

இந்த உடையின் வடிமைப்பாளர்களில் ஒருவரான எலிசபெத் இம்மானுவேல் இதுபற்றி கூறும்போது, “இந்த உடையை வடிவமைப்பதற்காக இளவரசி டயானாஎன்னை தொலைபேசியில் அழைத்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. அது ஒரு விசித்திரமான தருணம். அந்த வாழ்க்கை மீண்டும் ஒரு போதும்வராது என்பதை நினைவுபடுத்தும் தருணம்” என குறிப்பிட்டார்.

இந்த உடைகளை காட்சிக்கு வைப்பதற்கு இளவரசர் வில்லியமும், அவரது சகோதரர் ஹாரியும் இரவலாக தந்து உதவி உள்ளனர்.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடிக்கிறது. அனைவரும் காண முடியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!