முந்தானை முடிச்சு படத்தில் வந்த கிளாமர் டீச்சரை நியாபகம் இருக்கா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக, நடிகராக வலம் வந்த பாக்யராஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது.

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் உடன் ஊர்வசி, தீபா, கே.கே சௌந்தர், தவக்களை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்து மக்களால் பெருமளவில் கவரப்பட்டது.

மேலும் இந்த படத்தில் கொஞ்சம் கிளாமரான டீச்சராக வந்து இளசுகளை உசுப்பேத்தியவர் உன்னி மேரி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும், துணை நடிகையாகவும், கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் 57 வயதிலும் இளமையாக இருக்கும் அவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!