விருப்பங்களை நிறைவேற்றும் விநாயக சுக்ர வார விரதம்!

விநாயகர் பெருமான் தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.



விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப்பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப்பிடிக்க வேண்டும்.

வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டிற்குரிய தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார்.

விரதமுறை: பகலில் உணவை தவிர்த்து, இரவு நேரத்தில் பழம், இட்லி சாப்பிடலாம்.

பலன்:- கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். – source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!