லேசான கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்… அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்த எதிர்மறை செய்திகளே அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான ஒரு சாதகமான செய்தி அமெரிக்காவில் இருந்து வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்த எதிர்மறை செய்திகளே அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான ஒரு சாதகமான செய்தி அமெரிக்காவில் இருந்து வெளியாகி இருக்கிறது.

அதாவது, அமெரிக்கா செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி, லேசான கொரோனா பாதிப்பு, உடலில் நோய் எதிர்ப்பு பொருள் உற்பத்தியை தூண்டுகிறது. அதன்மூலம், நீடித்த பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது.

இதுதொடர்பாக குறிப்பிட்ட மருத்துவ கல்லூரி இணை பேராசிரியரும், ஆய்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவருமான அலி எல்லிபெடி கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றால் உடலில் நோய் எதிர்ப்பு பொருட்கள் விரைவாக மறைவதாக சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. உடனே பல ஊடகங்களில், கொரோனா தாக்கினால் நோய் எதிர்ப்புசக்தி நீடிப்பதில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மையில்லை. கொரோனா தொற்றுக்கு பின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் அளவு குறைகிறது. ஆனால் அது முற்றிலும் இல்லாமல் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா அறிகுறி தென்பட்ட 11 மாதங்களுக்கு பிறகு, அந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்யும் செல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த செல்கள், லேசான கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எஞ்சிய காலம் முழுவதும் உடலில் நோய் எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன, நீடித்த பாதுகாப்பை வழங்குகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அவற்றில் சில நீண்டகாலம் வாழும் பிளாஸ்மா செல்கள், எலும்பு மஜ்ஜைக்கு இடம்பெயர்ந்து, ரத்த ஓட்டத்தில் தொடர்ந்து எதிர்ப்பு பொருட்களை சுரந்துகொண்டே இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!