தூக்கமின்மையால் பெண்கள் அவதிப்படுவதற்கான காரணங்கள்!

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.


(ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.

  • பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.
  • ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!