சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு இந்த நிலையா?துயரத்தை போக்கிய பூமா!

நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணியால் வீரர்களுக்கு ஷூ போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1990 மற்றும் 2000-ங்களில் ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் திகழ்ந்தது. கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடியுள்ளனர்.

ஆனால் தற்போது ஜிம்பாப்வே அணி நலிவுற்று காணப்படுகிறது. கிரிக்கெட் போர்டும் நிதியுன்றி தவிக்கிறது. இதற்கு உதாரணமாக அந்த அணியின் ரியான் பர்ல், ஒவ்வொரு தொடருக்குப்பின்னும் விளையாடும் ஷூவை ஒட்ட வைக்கமுடியாது என ஷூவை பசையால் ஒட்டு காயவைக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நாங்கள் ஸ்பான்சர் பெற ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு இந்த நிலையா? என அனைவரும் கவலைக்கொள்ளும் வகையில் அவரது போஸ்ட் இருந்தது. இந்த நிலையில் பூமா நிறுவனம் ஸ்பான்சர் வழங்க தயார் எனத் தெரிவித்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!