தாய், சகோதரியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

கடந்த 2 வார இடைவெளியில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை கொரோனா பாதிப்பு காரணமாக தனது தாய் மற்றும் சகோதரியை இழந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இந்திய அணிக்காக 48 ஒருநாள் போட்டி மற்றும் 76 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவரில் விளையாடினார்.

இந்த நிலையில் கடந்த 2 வார இடைவெளியில் வேதா கிருஷ்ணமூர்த்தி கொரோனா பாதிப்பு காரணமாக தனது தாய் மற்றும் சகோதரியை இழந்துள்ளார்.

வேதாவின் தாய் தேவி 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது சகோதரி வத்சலாவும் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!