மீனாட்சி அம்மன் கையில் இருக்கும் கிளி… எதற்காக தெரியுமா..?

பக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.


‘மீனாட்சி’ என்று சொன்னாலே, அன்னையின் கையில் இருக்கும் கிளி நினைவுக்கு வராமல் இருக்காது. பக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.

தன்னுடைய சாபம் நீங்க, இத்தல இறைவனை வழிபடுவதற்காக இந்திரன் இங்கு வந்தான். அப்போது ஏராளமான கிளிகள், இத்தல இறைவன் எழுந்தருளியிருந்த இடத்தின் மேற்பகுதியில் பறந்தபடி, அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனவாம்.

இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த இந்திரன், இத்தல இறைவனை வழிபாடு செய்து விமோசனம் பெற்றான். இந்திரன் இங்கு சிவ வழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில், மதுரையில் கிளி முக்கியத்துவம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!