ரிஷப ராசிக்கான பிலவ புத்தாண்டு 2021 பலன்கள்!

பிலவ தமிழ் வருடம் மகர லக்கினத்தில் பிறக்கிறது.பரணி நட்சத்திரம், திரிதியை திதியில் சித்திரை 1ல் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார் இந்த அற்புத நாளில் தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் கிரகங்களின் ராஜாவாக செவ்வாய் வருகிறார்.


இந்த ஆண்டில் ரிஷப ராசியினருக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது போல உங்களுக்கான தன வரவுகள், பொருள் வரவு இருக்கும். அதே சமயம் விரய செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
​பிலவ வருடம் கிரக நிலை :

பிலவ வருடம் கிரக நிலை :

பிலவ தமிழ் வருடம் மகர லக்கினத்தில் பிறக்கிறது.

மகரத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

குரு பகவான் கும்பத்தில் அதிசார பெயர்ச்சியில் இருக்கிறார்.

மீனத்தில் புதன் பகவான் சஞ்சரிக்கிறார்.

மேஷத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன் சஞ்சரிக்கின்றனர்.

ரிஷபத்தில் ராகுவும், மிதுனத்தில் செவ்வாயும் சஞ்சரிக்கின்றனர்.

கேது விருச்சிகத்தில் இருக்கிறார்.

பரணி நட்சத்திரம், திரிதியை திதியில் சித்திரை 1ல் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார் இந்த அற்புத நாளில் தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் கிரகங்களின் ராஜாவாக செவ்வாய் வருகிறார்.

இந்த தமிழ் வருடத்திற்கு பிலவ வருடம் என்று பெயர். 60 தமிழ் வருடங்களின் பட்டியலில் இந்த பிலவ ஆண்டு 35வதாக வருகிறது. சனி பகவானின் ஆட்சி எண் என குறிப்பிடப்படுகிறது.

இதன் காரணமாக ஆண்டின் தொடக்கத்தில் பலன்கள் சற்று பிரச்னை தரக்கூடியதாக, சற்று மோசமான பலன்கள் கிடைக்கும் என்றாலும், ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் பல்வேறு வகையில் அதிர்ஷ்ட பலன், எதிலும் வெற்றியைப் பெறக்கூடியதான பலன்களைப் பெறலாம்.

இந்த ஆண்டில் மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் சற்று அதிகமாகவே இருக்கக்கூடிய நிலை உண்டு.

இந்தாண்டில் செவ்வாய், சனி சேர்க்கையில் தொடங்குவதால் கோபம், பொறாமை, நெருப்பு, கூட்டத்தில் சிக்கி மரணம் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

ரிஷப ராசி, ரிஷப லக்கினத்திற்கான பலன்கள் :

இந்த பிலவ வருடம் ரிஷப ராசிக்கு 9ம் இடமான மகர லக்கினம் அமைகிறது.

ராசிக்கு 12ம் இடமான மேஷத்தில் ஆண்டு பிறக்கிறது. அதே சமயம் ரிஷப ராசி அதிபதியான சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது.

12ல் புத்தாண்டு பிறப்பதால் ஒரு சில சிக்கல்களும் சேர்ந்தே இருக்கும்.

இந்த ஆண்டு ரிஷப ராசிக்கு அதிகளவில் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் பயணம் செய்ய வேண்டி வரும். அது அந்த ராசியைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வேலை, கல்வி, தொழில், வியாபாரம், சொந்த விஷயம் தொடர்பாக அமையும். இருப்பினும் சற்று அலைச்சல் தரக்கூடியதாக இந்த பயணங்கள் அமையும்.

​நிதி நிலை எப்படி ?

இந்த ஆண்டில் ரிஷப ராசியினருக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது போல உங்களுக்கான தன வரவுகள், பொருள் வரவு இருக்கும். அதே சமயம் விரய செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

குரு தரும் பலன்கள் :

குரு தற்போது அதிசாரமாக ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் சிறக்கும். நினைத்த லாபம் கிடைக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது? – அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் இதோ!

வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும்

இந்தாண்டு முழுவதும் ஏதேனும் ஒரு வகையில் பண வரவு வந்து கொண்டே இருக்கும். ஏனெனில் குரு தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் லாபம் ஏற்படும்.

உங்களுக்கு வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். உங்களின் நிதிப்பிரச்னை நீங்கி, கடன் பிரச்னை தீரக்கூடும்.

இதுவரை பிரச்னை கொடுத்து வந்த ராகு பகவான் உங்களுக்கு இனி நற்பலன்களைத் தரக்கூடியவராக இருப்பார்.

குடும்பம்

குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இந்தாண்டு கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு, தேவையற்ற பிரச்னைகள், பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.விவாகரத்து வரை செல்லக்கூடிய நிலை இருக்கும் என்பதால் கவனம் தேவை.

இதைத் தவிர்க்க நீங்கள் ஏதேனும் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் வேலை தொடர்பாக முயன்று கொண்டிருந்தால், வாய்ப்பு கிடைத்தால் செல்வது நல்லது.

திருமணம் உள்ளிட்ட சுப காரிய முயற்சிகள் வெற்றி தருவதாக இருக்கும்.

வெளிநாடு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் என்பதால் அதை சிறப்பாக சேமித்து வைக்க முயல்வது நல்லது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!