தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே..!

ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள்.

என்னை நம்பும் என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக, நான் என் உயிரையே விட்டு விடுவேன். ஒருவனை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்து விட்டு, பிறகு அவனைக் காப்பாற்றாமல் கைவிடமாட்டேன். வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வார்.

இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக் கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள்.- Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!