கரு கருன்னு கூந்தல் வளர, இந்த எண்ணெயை தடவுங்க..!

நம் அனைவருக்கும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பாதாம் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதில் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளது.இந்த பாதாம் எண்ணெயின் பயன்களை பார்க்கலாம் .

கூந்தல் வளர்ச்சி:

நம்முடைய முடியை அடர்த்தியாக வளர வைப்பதில் இந்த பாதாம் எண்ணெய்க்கு மிக பெரிய பங்கு உள்ளது. இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்ட சத்தை தருகிறது. இதற்கு நாம் தூங்கும் முன் இரவில் பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நம் தலை முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.
பொடுகு தொல்லை:

பாதாம் எண்ணெய் நம்முடைய பொடுகை நீக்கும் சக்தி கொண்டது.நம்முடைய தலையில் இறந்த செல்கள் படிவதையே நாம் பொடுகு என அழைக்கின்றோம். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி நம்முடைய தலை முடி நன்றாக வளர உதவுகிறது. இந்த பாதாம் எண்ணெயை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின் குளிக்க வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் நம்முடைய பொடுகு தொல்லை நீங்கும்.

கூந்தல் வறட்சி:

நம்மில் பலருக்கு வறண்ட கூந்தல் மற்றும் கூந்தலில் நுனியில் வெடிப்பு ஏற்படும். இதனால் நம்முடைய கூந்தல் வளர்ச்சியானது தடைபடும். இதற்க்கு இந்த பாதாம் எண்ணெய் சிறந்த நிவாரணமாக இருக்கும். எனவே தினமும் நம்முடைய தலையில் பாதாம் எண்ணையை தடவி மசாஜ் செய்த பின் குளித்து வந்தால் நம்முடைய கூந்தலில் உள்ள வெடிப்புகள் மற்றும் வறட்சி தன்மை நீங்கும். மேலும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய கூந்தல் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.

வறண்ட சருமம்:

நம்முடைய சருமம் கோடை வெயிலின் காரணமாக வறண்டு காணப்படும். . இந்த பாதாம் எண்ணெய் கொண்டு நம்முடைய முகத்தில் மசாஜ் செய்வதால் நமக்கு வறண்ட சருமம் நீங்கி நமக்கு மென்மையான சருமத்தை பெறலாம். இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருபதால் வறண்ட சருமமும் இதனை எளிதாக உறிஞ்சி கொள்ளும். எனவே நமக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.

உதடு வெடிப்பு:

கோடை காலங்களில் நம்முடை உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இதனை நம்முடைய உதட்டின் மென்மை தன்மை போய்விடும்.இதற்கு ஒரே தீர்வு இந்த பாதாம் எண்ணெய் தான். சிறிது பாதாம் எண்ணெயில் 2 சொட்டு தேன் கலந்து அந்த கலவையை நம்முடைய உதட்டில் தடவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் நம்முடைய உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.- source: top.tamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!