சாய்பக்தர்கள் இப்படி செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.!

சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.

மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.

சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும்.

இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.-Source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!