மாதவிடாய் வலி குறையும்.. பெண்களே கட்டாயம் ட்ரை பண்ணுங்க!!

பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி.

இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாம். அந்த வகையில், தினசரி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் பாதங்களை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மசாஜ் செய்யும்போது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடலில் ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சமமாகி நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தசைப்பிடிப்பு, உடல் சோர்வு ஆகியவற்றை நீக்கும். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!