இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது!

இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

ஸ்ட்ராபெரி பழங்களில் வைட்டமின்-சி, தையமின், வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் உள்ள அமிலங்கள், பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது.

ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி பழம் பேருதவி புரிகிறது.

ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “ஏ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது.

ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!