என் மகள் பொய் சொல்லுறா.. மேகன் மார்கலின் தந்தை பரபரப்பு தகவல்.!!

மேகன் மார்கல் அரசு குடும்பத்திற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவருடைய தந்தை மேகனுக்கு எதிராகவும் ராயல் குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேகனின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று நான் கருதவில்லை. இதனைத்தொடர்ந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் மேகனின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த தாமஸ் மார்கல் ,’ராயல்ஸ் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவர்கள் இனவெறி கொண்டவர்களாக எனக்கு தெரியவில்லை என்றும், ஆங்கிலேயர்களும் இனவெறி கொண்டவர்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் குழந்தையின் நிறத்தை பற்றி யாராவது ஒரு கேள்வியை எழுப்பி இருக்கலாம் அதற்காக ராயல்ஸ் குடும்பம் மொத்தமாக இனவெறி கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேகனின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!