மிருகா திரைவிமர்சனம்.!

நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகை ராய் லட்சுமி
இயக்குனர் ஜே.பார்த்திபன்
இசை அருள் தேவ்
ஓளிப்பதிவு எம்.வீ.பன்னீர்செல்வம்


நாயகன் ஸ்ரீகாந்த், கணவரை இழந்த வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகிறார். இதை ஒரு பெண் கண்டுபிடித்து ஸ்ரீகாந்த்தை மிரட்டுகிறார். இதற்கு பயப்படும் ஸ்ரீகாந்த்திடம் என் அக்கா ராய் லட்சுமியை காதலித்து ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் படி கேட்கிறார்.

ஸ்ரீகாந்த்தும் இதை ஏற்று, ராய் லட்சுமி இருக்கும் இடத்தை தேடி போகிறார். ராய் லட்சுமியின் அழகில் மயங்கும் ஸ்ரீகாந்த், இறுதியில் அவரை ஏமாற்றி பணம் பறித்தாரா? ராய் லட்சுமியை உண்மையாக காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது என்று கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக வரும் ராய் லட்சுமி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். புலிக்கு பயப்படும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பாலாவின் உதவி இயக்குனர் ஜே பார்த்திபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை யூகிக்கும் திரைக்கதை. தேவையில்லாத புலி காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதை என்றாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. அருள் தேவ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘மிருகா’ சுவாரஸ்யம் குறைவு.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!