டிஎன்ஏ கிட்டால் தெரிந்த உண்மை…. தோழிகள் அக்கா தங்கையான சுவாரசியம்..!


அமெரிக்காவில் தோழிகளாக இருந்த இருவரும் டிஎன்ஏ பரிசோதனையில் சகோதரிகள் என்று தெரியவந்ததால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) ஆகிய இருவரும் தோழிகள். இவர்கள் பார்ப்பதற்கு சகோதரிகள் போன்று இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இருவரின் உடலிலும் டொமினிக்கன் குடியரசின் கொடி பச்சை குத்தப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்துள்ளனர். இதனால் நாம் இருவரும் உண்மையாகவே சகோதரிகளாக இருப்போமோ? என்ற சந்தேகம் இருவருக்கும் உண்டானது.

மேலும் இருவருமே தத்து கொடுக்கப்பட்டவர்கள் தான். இந்நிலையில் Cassandraவின் வளர்ப்பு தாய் கடந்த 2018 ஆம் வருடத்தில் டிஎன்ஏ கிட் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி Cassandra பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் ஆச்சரியப்படும் வகையில் அவரைப் பெற்ற தந்தை தற்போது டொமினிக்கன் குடியரசில் வாழ்வதும் அவரின் பெயர் Adriano Luna Collada என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் உடனடியாக Cassandra தன் தந்தை வாழும் இடத்திற்கு சென்றார். அங்கு சென்றதும் முதல்முறையாக தன் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் எனக்கு பின் வேறு யாரையாவது தத்து கொடுத்தீர்களா? என்று தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அவரின் தந்தை 9 குழந்தைகள் பிறந்ததில் ஒரு குழந்தை நோய் வாய்ப்பட்டதால் வறுமையின் காரணமாக வேறு வழியின்றி இரண்டு குழந்தைகளை தத்து கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இவரின் தாய்க்கு புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2015-ஆம் வருடத்தில் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தைக்கண்ட மகிழ்ச்சியில் அமெரிக்கா திரும்பியவுடன் Juliaவையும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய கூறியதோடு குடும்பத்தை சந்தித்த விவரங்களையும் அவரிடம் தெரிவித்துள்ளார். சோதனையின் முடிவில் Julia, Cassandraவின் தங்கை தான் என்று தெரியவந்துள்ளது. அதன் பின்பு குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள் அக்கா தங்கையான தோழிகள் இருவரும்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!