ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45பேர் மதுரையில் செய்த சாதனை.. என்ன தெரியுமா..?


மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45பேர் உடலுறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் மறைந்த திரு. ஆறுமுகம் மற்றும் குப்பாயி அம்மாள். இவர்களுக்கு மகன் மற்றும் மகழ்வழி பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் என ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மறைந்த தாத்தா, பாட்டியின் நினைவு தினத்தை முன்னிட்டு, குடும்பமாக வந்து உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். 42 பேர் கண்தானமும், 35பேர் உறுப்பு தானமும் செய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேரும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து, உடலுறுப்பு தானத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், பெரும்பாலான மக்கள் உடலுறுப்பு தானம் செய்வதை பாவமாக கருதுகின்றனர். ஆனால் தங்களின் முன்னோரின் நினைவு நாளை முன்னிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் உடலுறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இவர்களைப் போன்று அனைவரும் உடலுறுப்பு தானத்தை செய்ய முன்வர வேண்டும் என்று கூறினர்.

இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக திகழும் நிலையில், மறைந்த திரு. ஆறுமுகம் மற்றும் குப்பாயி அம்மாள் குடும்பத்தினர் தமிழகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்துள்ளனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!