60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர் – ட்ரெண்டான தமிழக தம்பதியினர்..!


ஆழ்கடலில் நடந்த திருமணம் 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.ஸ்வேதாவுக்கு ஆழ்கடலில் நீந்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஒருவித பயத்துடன் இருந்த ஸ்வேதா, பயிற்சிக்குப் பிறகு தைரியமானார்.


மணமக்கள் இருவரும் பாரம்பரியமிக்க உடைகளை அணிந்து, படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்றனர். மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் பொருத்தப்பட்டது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் படகு மூலம் கரைக்கு வந்தனர். கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆழ்கடலில் தென்னை ஓலையைக் கொண்டு மலர்களைக் கொண்டு அலங்கரித்தோம். மலர்கள் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகளை ஒவ்வொரு மலர்களிலும் இணைத்துக் கட்டினோம். அதைப்போல மணமகளின் சேலையிலும் மணமகளின் வேஷ்டியிலும் பேஸ்ட்களை ஒட்டினோம். அடுத்து தாலி மற்றும் மாலையிலும் அலுமினிய குண்டுகளை இணைத்திருந்தோம். நல்ல நேரத்தில் ஆழ்கடலுக்குள் மாலைகளை மணமக்கள் மாற்றிக் கொண்டனர். பின்னர் ஸ்வேதா கழுத்தில் சின்னதுரை தாலி கட்டினார். சுமார் 40 நிமிடங்கள் இந்தத் திருமண நிகழ்வு நடந்தது. மாப்பிள்ளைத் தோழனாக சந்துருவும் மணமகள் தோழியாக தீபிகாவும், அழகுக் கலை நிபுணர், புகைப்பட நிபுணர் ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்” பிளாஸ்டிக் மற்றும் சில பொருள்களால் கடல் மாசுபட்டு வருகிறது. மாசுவிலிருந்து கடலைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த அனுபவம் வித்தியாசமானது” என்றார்.- source: seithi.alai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!