பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார் தெரியுமா..?


குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும் கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர். ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன. ஸ்ரீசாயி அஷ்டோத்திர சத நாமாவளிகளில்,

ஆனந்தாய நம: ஆனந்ததாய நம: – என இரண்டு நாமாவளிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில் தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது தெரியுமா? இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்த மாக பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார் தெரியுமா..? தாம் ஞானம் பெற்றது பற்றி பாபா..!

ஆனந்ததாய நம:

முதல் நாமாவளியின் பொருள் ‘ஆனந்தமாக இருப்பவர்’ என்பதாகும்; ‘ஆனந்தத்தை வழங்குபவர்’என்பது அடுத்த நாமாவளியின் பொருளாகும். நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது. அப்படியே இருந்து, அவர் நமக்கு அதைக் கொடுத்தாலும், அவரிடம் அது குறைந்துவிடும்.

ஆனால், சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதேநேரத்தில், அவரிடம் அது குறைந்துவிடப் போவதும் இல்லை. எப்போதுமே ஆனந்தமாக இருக்கும் சாயிநாதர், நாம் வேண்டுகின்ற ஆனந்தத்தை நமக்கு வழங்குவதுடன், அவரும் ஆனந்தம் குறையாதவராகக் காணப்படுகிறார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!