காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரம் – டிக்டாக் சூர்யா மீது கிராம மக்கள் புகார்!


ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் சூர்யா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் பாலியல் வழக்கில் சிக்கி காவல்நிலையம் சென்று திரும்பினார். இந்நிலையில் தற்போது மற்றொரு புகாரில் அவர் மீது ஒரு கிராம மக்களே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்த காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கப்பட்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தீ எரியும் டயரை யானை மீது சிலர் வீசியப்போது, யானை வேதனையில் அங்கிருந்து ஒடியது அதில் பதிவாகியுள்ளது.

தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய அந்தக்காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த டிக்-டாக் சூர்யா என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மசினகுடி பகுதி மக்களை கொச்சையாக பேசியவர், அந்த ஊருக்கு போக்குவரத்து, பால், குடிநீர் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என பேசி இருந்தார். யானையை கொன்றது மசினகுடி மக்கள் என்பதை குறிப்பிடும் வகையில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் அவருடைய பேச்சு அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த மசனகுடி பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, ஒருசிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மசனகுடி மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக சூர்யாவிற்கு கண்டனம் எழுந்தது.

மேலும், மசினகுடி ஊர் மக்கள் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மசனகுடி காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!