DIG பதவியை தூக்கி எறிந்த விவசாயியின் மகன்… ஆடிப்போன அரசாங்கம்!


வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி `டெல்லி சலோ’ போராட்டங்களை நடத்தி வரும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஏற்கெனவே பஞ்சாப் விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி கொடுக்க முன்வந்தனர். இப்போது அதேபோல் ஒரு முடிவை பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருக்கும் லக்மிந்தர் சிங் ஜக்கர்
எடுத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜக்கர். ‘அடிப்படையில் நான் ஒரு விவசாயியின் மகன். இதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். ஆனால் இப்போது போராடும் விவசாயிகளோடு நான் நிற்க வேண்டிய நேரமிது”” விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மாநில உள்துறை செயலாளருக்கு அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், “பண்ணைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நானும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். உடனடியாக என்னை பணியில் இருந்து விடுவியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்ததனால்தான். எனவே, விவசாயத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!