மிரள வைக்கும் மர்ம ஹோட்டலின் 5-வது மாடி…. ஏன் தெரியுமா..?


இந்த உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஹோட்டல்களைப் நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் இன்று வட கொரியாவில் உள்ள இந்த ஒரு ஹோட்டலைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.. இதைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய ஹோட்டலான யாங்காடோ ஹோட்டலின் ஐந்தாவது மாடி மிகவும் மர்மமானதாக உள்ளது. அந்த மாடிக்கு செல்ல மட்டும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 47 மாடி யாங்கடோ ஹோட்டலில் மொத்தம் 1000 அறைகள் உள்ளன. இது ஒரு சொகுசு ஹோட்டல், ஒரு அறைக்கான வாடகை சுமார் 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த ஹோட்டலின் லிப்டில் 5-வது மாடிக்கு செல்லும் பட்டன் இல்லை. இந்த இடத்திற்கு யாரும் செல்வதில்லை. வட கொரியா மிகவும் கடுமையான சட்டங்கள் மற்றும் விதிகளை கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே. யாராவது இந்த இடத்திற்குச் சென்றால், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தாக வேண்டும்.

2016 ஆம் ஆண்டில், ஓட்டோ வார்ம்பியர் என்ற அமெரிக்க மாணவர் யாங்காடோ ஹோட்டலின் ஐந்தாவது மாடிக்கு நடந்து சென்றார். ஆனால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நிறைய சித்திரவதைகளை அவர் அனுபவித்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும், அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் கோமா நிலைக்குச் சென்ற அவர், 2017-ல் இறந்தார் என்பது வேதனையான விஷயம்.. .

மற்றொரு அமெரிக்க குடிமகன் கால்வின் சன் கூறிய போது ” யாங்கடோ ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் பதுங்கு குழி போன்ற சிறிய அறைகள் உள்ளன.. பெரும்பாலான அறைகளில் பூட்டுகள் உள்ளன. அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஜப்பானுக்கு எதிரான ஓவியங்கள் அங்கு உள்ளன. அங்கு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு ஓவியத்திலும், ‘அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அனைத்தும் எங்கள் எதிரி, அமெரிக்காவை 1000 முறை பழிவாங்குவோம்’ என்று எழுதப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!