தவறா புரிஞ்சிட்டு பதில் கூறுகிறார்…. இந்த வாரம் நாமினேஷனுக்கு டார்கெட் ரியோ.!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிஷா மற்றும் ரமேஷ் ஆகியோர் அன்பு குரூப்பில் இருந்து வெளியேறி பலருக்கும் ஷாக்கை கொடுத்தனர் . குறிப்பாக அர்ச்சனாவுக்கு பெரும் அதிர்ச்சியே இன்று கூறலாம் . இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் படலம் நடந்துள்ளது .தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் அனைவரின் முன்னிலையிலும் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

அதில் இந்த வாரம் நாமினேஷனுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களில் பலரும் ரியோவை நாமினேட் செய்துள்ளனர் .அந்த வகையில் அனிதா ,ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் ரியோவை நாமினேட் செய்ய ,ரியோ பாலாஜியையும் , அர்ச்சனா ஆரியையும் செய்துள்ளார் .ரியோ பாலாஜியை நாமினேட் செய்த போது மற்றவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று முடிவு செய்த பாலா, தன்னை அவர் மாற்றி கொண்டார். இந்த வீட்டில் இருக்கின்றவர்கள் மாறவே கூடாது என்று கூறிய நிலையில் தன்னை மாற்றி கொண்டதால் பாலாவை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார்.

இதுகுறித்து விளக்கமளித்த பாலா, ஒரு விஷயம் தப்பு பண்ணும்போது அது தப்பு என்று நமக்கு தெரியும்போது அதை ஏற்று கொள்கிறோம். ஒரு கருத்தை தவறாக புரிந்து கொண்டு அதற்கு தவறான பதிலையும் கொடுப்பதால் ரியோவை நான் நாமினேட்செய்கிறேன் என்று கூறுகிறார்.- source: cinebar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!