சித்ரா அக்கா ரொம்ப பாவம்… அவன் ஒரு குடிகாரன் – கொந்தளித்த உதவியாளர்!


தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் வருங்கால கணவர் சரியில்லை என்றும் அவர் ஒரு குடிகாரர் என்றும் சித்ராவின் உதவியாளர் முகமது கூறியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை நடிகையும் பிரபல விஜேவுமான சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

துரு துருவென இருப்பாரே அவரா தற்கொலை பண்ணிக் கொண்டார் என ஏகப்பட்ட பிரபலங்கள், சக நடிகர்கள் அவரது மரணத்தில் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை முடித்து கொடுத்துவிட்டு, தனது வருங்கால கணவர் ஹேமந்த் ரவியுடன் நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று முன் தினம் அதிகாலை தங்கினார். பின்னர், குளிக்கப் போகிறேன் எனக்கூறி ஹேமந்தை வெளியே அனுப்பி விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவித்தது.


விஜே சித்து தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை அவர், ரொம்பவே போல்டான பெண், தற்கொலைக்கு எதிரானவர், சைக்காலஜி படித்து உள்ளார். நிச்சயம் இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை கொலையாகத் தான் இருக்கும் என அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களும், சக நடிகர்களும் பேட்டி கொடுத்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் தனக்கும் சித்ராவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்று விட்டது என ஹேமந்த் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஹேமந்த் ரவி தப்பான ஆள் என சில நடிகைகள் பேட்டிக் கொடுத்த நிலையில், மகளை பறிகொடுத்த சித்ராவின் அம்மாவும், அவன் தான் என் மகளை கொன்னுட்டான், அவனை சும்மா விடாதீங்க என கதறி அழுத வீடியோ பலரது நெஞ்சை உலுக்கியது.


இந்நிலையில், விஜே சித்ராவின் உதவியாளரான முகமது என்பவர், சித்ராவின் இறுதிச்சடங்கில் பேசிய வீடியோவும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஹேமந்த் ஒரு குடிகாரன் என்றும், குடிகாரனுக்கு வாக்கப்பட்ட சித்ரா அக்கா என்றும் அவர் அழுது புலம்பியுள்ளார்.

மேலும், விஐபி, விஐபின்னு பார்க்காதீங்க, சித்ரா அக்கா ரொம்ப பாவம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, ஹேம்நாத் வீட்டிலும் வேலை பார்க்க சென்றேன், அவர் சரி கிடையாது என்பதை புரிந்து கொண்டேன், தீவிரமாக போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் முகமது ஆதங்கப்பட்டுள்ளார்.

ஆனால், ஹேமந்தின் பெற்றோர்கள், சித்ராவையும் தங்களது மகளாகவே பார்த்ததாகவும், வீணாக எனது மகனை குற்றவாளியாக சித்தரிக்கின்றனர். அவன் எதுவுமே செய்யவில்லை என்றும் இது தற்கொலை தான் என்றும் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர். சித்ராவின் உடல் நேற்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.- source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!