கொரோனா நடுவில் மலர்ந்த காதல்…. போலீஸ் குடும்பத்தில் பிறந்த சித்ரா!


சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்ரா இன்று மக்களிடையே பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

குடும்ப பின்னணி:

மே 2, 1992 ஆம் ஆண்டு பிறந்த நடிகை சித்ராவின் தந்தை வேளச்சேரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் தாத்தா ராணுவத்தில் பணியாற்றியவர். சித்ராவின் அண்ணன், தற்போது சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.ஆரம்பகாலக்கட்டத்தில் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய குடியிருப்பில் அவர்களது குடும்பம் வாழ்ந்து வந்துள்ளனர்.


தொலைக்காட்சியில் அறிமுகம்:vj

இப்படி எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த அவர் 2013 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன்பின் பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய அவர் மன்னன் மகள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி-2, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்த சித்ரா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்.


கொரோனா நடுவில் மலர்ந்த காதல்:

இதற்கிடையே சித்ரா ஈசிஆர் சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு மாறியுள்ளார். அந்த வீட்டின் கீழ்பகுதியில் தான் தற்போது அவர் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள ஹேமந்த் ரவியின் வீடு உள்ளது. கொரோனா நேரத்தில் அமல்படுத்தப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நடைபெறாததால் வீட்டில் இருந்த சித்ரா, ஹேமந்த் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் திருமணம்:

இதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையடுத்து ஜனவரியில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ஆனால் அக்டோபர் 19 ஆம் தேதியே தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேமந்த் ஆர்.டி.ஓ. விசாரணையில் தெரிவித்துள்ளார். அவரின் மர்ம மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: malai+murasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!