சுனாமியிலிருந்து தப்பிக்க தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் – ஜப்பான் சாதனை..!


ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். பலர் பாதிக்கப்பட்டனர். சுனாமியிலிருந்து தப்பிக்க பலர் கார்களுக்குள் சென்றனர். ஆனால் அலையானது மக்களை காருடன் அடித்துச் சென்றது.

இந்நிலையில், சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மூழ்காமல் இருக்கும் வகையில் புதிய கார் ஒன்றை ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுருமாக்கி வடிவமைத்துள்ளார். இந்த சிறிய எலக்ட்ரிக் கார் குறைந்த வேகத்தில் மிதந்து செல்லும். இவர் ரோக்கியோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்த மிதக்கும் காரை வடிவமைத்துள்ளார்.

நான்கு இருக்கைகளுக்கும் அடியில் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் காரின் விலை மிக அதிகம். விரைவில் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!