ஒன்பது வியாழக்கிழமைகள்…. சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவார்..!


கோகிலா என்னும் பெண்மணியும் அவர் கணவர் மஹேஷும் குஜராத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தனர். இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர். ஆனால் மஹேஷ் அவர்களோ சுபாவத்தில் சண்டைகாரராக இருந்தார்.வரை முறையற்ற பேச்சு சிடுமூஞ்சித்தனம் நிறைந்தவராக இருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரது சுபாவத்தினால் தொல்லை அடைந்தனர். ஆனால் கோகிலா அம்மாளோ மிகுந்த ஒழுக்க நெறியுள்ள பெண்மணியாக இருந்தார். இறைவன் மேல் தீரா நம்பிக்கை கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் வியாபாரம் நஷ்டமடைய ஆரம்பித்து நாளடைவில் ஒரேயடியாக வருமானமும் நின்று போய் விட்டது. மஹேஷ் வீட்டிலேயே இருக்கத் துவங்கினார். அதனால் இன்னும் அவர் சுபாவம் மோசமடைய ஆரம்பித்தது. முன்பை விட அதிக சிடுமூஞ்சி ஆனார்.

ஒரு மதிய நேரம் ஒரு முதிய சாது அவர் வீட்டுக் கதவருகில் நின்றார். முகத்தில் அபூர்வமான ஒளியும்,தேஜசும் நிறைந்து இருந்தது. அவர் கோகிலாவிடம் சாதம்,பருப்பு அளிக்கும்படிக் கேட்டார். கோகிலாவும் சாதம்,பருப்பு அளித்து இரு கை கூப்பி நமஸ்காரம் செய்தார். ”சாதுவும் சாயி உங்களை சுகமாக வைப்பார்” என்று ஆசிர்வதித்தார். கோகிலா அம்மாளூம், “ஐயனே! சுகம்,சாந்தி எங்கள் விதியிலேயே இல்லை போன்று இருக்கிறது.” என்று வருத்தமாகக் கூறித் தன் துன்பம் நிறைந்த கதையைக் கூறினார்.


சாதுவும் சாயிபாபாவின் விரதத்தை பற்றிக் கூறினார். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் அல்லது ஒரு வேளை உணவு உட்கொண்டு முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரதம் ஒன்பது வாரம் செய்து விதி முறைப்படி நிறைவு செய்யவும்.

ஏழைகளுக்கு உணவு அளித்து சாயி விரத புத்தகங்களை தன்னால் இயன்ற அளவு 5,11,21 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கவும். இப்படி சாயி விரதத்தின் மஹிமையைப் பரப்பினால் சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவார். இந்த விரதம் கலியுகத்திற்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதம் கண்டிப்பாக மிகுந்த பலன்கள் அளிக்க வல்லது ஆனால் விரதமிருப்போர் சாயிபாபாவின் மேல் மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் வைத்தல் அவசியம்.

யார் மேற்கூறியபடி விரதமும் நிறைவும் செய்கிறார்கேளா, சாயிபாபா அவர்களுடைய விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். கோகிலா அம்மாளும் ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து ஒன்பதாவது வியாழனன்று ஏழைகளூக்கு உணவு அளித்தார். சாயி விரத புத்தகங்களை விநியோகித்தார். அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவு பெயரளவுக்குக் கூட இல்லாமல் போய் விட்டது. வீட்டில் பெரும் சுகம் ஆனந்தம் நிலவியது. அதேசமயம் மஹேஷின் சுபாவமும் மாறி அவருடைய வியாபாரமும் சூடு பிடித்தது. சிறிது நாட்களிலேயே ஆனந்தமும் செல்வமும் பெருகியது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாய் வாழலாயினர்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!