அடிக்கடி அவர் வீட்டிற்கு வருவார்! அம்பலப்படுத்திய பிள்ளைகள் -காதலனுடன் சிக்கிய தாய்!


கணவனுக்கு தெரியாமல், காதலனுக்கு பணத்தை கொடுத்து நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு தஸ்லின் என்ற 36 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களது மகனுக்கு கடந்த 20-ஆம் தேதி அன்று வீட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது, நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின், மறுநாள் அன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை காணவில்லை என தஸ்லின் கணவனிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட தஸ்லின், பிறந்த நாள் விழாவுக்கு வந்த தங்களது தங்கச்சியின் கணவர்தான் பணத்தை திருடி சென்றதாகவும், அதை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் தமீம் அன்சாரிக்கு மனைவி மீது சந்தேகம் வர, தஸ்லினின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் தஸ்லின் பலமுறை தொடர்பு கொண்டிருந்ததை கண்டு பிடித்தனர். அதை வைத்து விசாரித்ததில், அந்த எண் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் முகமது (38) என்பவரின் எண் என்று தெரிய வந்தது.

இதையடுத்து தஸ்லின் மற்றும் ரியாஸ் இருவரையும் போலீசார் ஒன்றாக விசாரித்ததில் தஸ்லின் செய்து வந்த அட்டூழியங்கள் வெளி வந்தன.

அதாவது, தஸ்லினின் கணவர் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இதனால் தனிமையில் இருந்து வந்த தஸ்லினுக்கு பேஸ்புக் மூலமாக ரியாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டதுடன் தமீமின் வீட்டு வந்து கணவன், மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு ரியாஸ் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ரியாஸுக்கும், தஸ்லினுக்கும் திருமண உறவை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது.

தமீம் வெளியூர் சென்று விடும் நாட்களில் தனிமையில் இருக்கும் தஸ்லினுக்கு அனைத்து வகையிலும் உதவியாக ரியாஸ். இருந்துள்ளார்.

இதனால், பல சந்தர்ப்பங்களில் ரியாஸுக்கு கேட்கலாமலேயே கணவன் சம்பாதித்த பணத்தை வாரி இறைத்துள்ளார். இதில் பணம் மட்டுமில்லாமல், தங்க நாணயங்கள், நகைகளும் கொடுத்துள்ளார்.

இந்நிலைதான் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை ரியாஸுக்கு கொடுத்துவிட்டு நாடகமாடியுள்ளனர்.

வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் இருவரையும் கைது செய்து, ரியாஸிடம் இருந்து ரூபாய் 41 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து தமீமிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பிள்ளைகள் இரண்டு பேரும், தன் அப்பா இல்லாத நேரத்தில், வாலிபர் அடிக்கடி வருவார் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!