திருமணமாகி 4 வருடங்கள்…. இளம் தாய் எடுத்த விபரீத முடிவு..!


சென்னை அருகே குழந்தையை கவனிப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் சல்மா சுல்தானா(வயது 25). இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது. 3 வயதில் முகமது சுகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்களது குழந்தைக்கு கண் பார்வை கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை கவனித்துக்கொள்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த சல்மா சுல்தானா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!