விஷப்பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன்..? பாம்பை விற்ற நபர் பற்றி அதிர்ச்சி தகவல்!


கேரளாவில் கொடிய விஷப்பாம்பை ஏவி மனைவியை கணவன் கொலை செய்த வழக்கில் அந்த பாம்பை விலைக்கு கொடுத்த பாம்பு பிடிப்பவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச்-2 ம் தேதி முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது, உயிருக்கு போராடிய மகளை அவர்களது பெற்றோர் மீட்டுக் கொண்டு வந்து தங்கள் வீட்டில் வைத்துள்ளனர்.

அந்த வீட்டுக்கு கடந்த மே 7 ம் தேதி சூரஜ் சென்றிருக்கிறார். திரும்பவும் கொடிய விஷம் கொண்ட பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.
மகளின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் உத்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பெயரிலேயே சூரஜ் கைது செய்யப்பட்டார்.

இதோடு இந்த சம்பவத்தில் பாம்பு பிடிப்பவரான சுரேஷ் என்பவரும் கைதானார். அவரிடம் இருந்து தான் சூரஜ் ரூ 10,000 கொடுத்து பாம்பை வாங்கியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கேரள நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சுரேஷ் நேற்று ஆஜரானார். அவர் அங்கு கூறுகையில், நான் பாம்பை கொடுத்ததால் தான் சூரஜ் இந்த கொலையை செய்தார்.

மனைவியை கொலை செய்வதற்காக சூரஜ் பாம்பை விலை கொடுத்து வாங்கினார் என எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் சுரேஷ் அப்ரூவர் ஆகிவிட்டார், இருந்த போதிலும் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என தெரியவந்துள்ளது.

இதனிடையில் வனத்துறையினர் சுரேஷ் தொடர்பில் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பாம்பு பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் கொடிய நாகங்களை பிடிக்கும் வீடியோக்களை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டத்துக்கு புறம்பாக பாம்புகளை அவர் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

சூரஜ் மற்றும் சுரேஷுக்கு எதிரான வனத்துறையின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!