செய்யும் பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கு இவை தான் காரணம்..!


நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலனளிக்கும்.

மூன்று வகையான கர்மாக்கள் உள்ளது. அவை ’த்ருத கர்மா’ தெரிந்தே செய்த பாவம், ’த்ருத அத்ருத கர்மா’ தெரிந்தே செய்த தப்பினை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பது, ’அத்ருத கர்மா’ தெரியாமல் செய்த தவறு.

பரிகாரங்கள்

த்ருத கர்மா

தெரிந்தே முன் ஜென்மத்தில் பிறருக்கு துன்பம் தரக்கூடிய குற்றங்களை செய்த பாவமாகும். பிறரின் சொத்தினை அபகரித்து கஷ்டப்படுத்தியது, பணத்திற்காக கொலை செய்தது, தாய் தந்தையரை கஷ்டப்படுத்தியது இவற்றிற்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன், குரு ஆகியோர்க்கு தொடர்போ அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அனுபவித்துதான் தீர வேண்டும். பாவங்கள் அடுத்த தலைமுறையினரை பாதிக்காமல் இருக்க அன்னதானம் அடிக்கடி செய்யவேண்டும்.

த்ருத அத்ருத கர்மா

முற்பிறவியில் நல்லது நடக்கும் என நினைத்து செய்திருப்போம். ஆனால் அது தீங்கினை விளைவித்திருக்கும். தீயவர்களின் குணம் அறியாமல் நாம் செய்த உதவி மற்றவர்களை பாதித்ததை அறிந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருப்போம். இந்த ஜென்மத்தில் ஜாதகரீதியாக தெய்வபரிகாரங்கள் செய்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோர்க்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும்.

அத்ருத கர்மா

மன்னிக்ககூடிய சிறிய குற்றங்களை தெரியாமல் மறுபிறவியில் செய்வதாகும். இதற்கு பரிகாரங்கள் தேவை இல்லை. மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டாலே போதுமானதாகும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!