மீனை பச்சையாக சாப்பிட்ட இலங்கை முன்னாள் அமைச்சர்..!


இலங்கையில் கொரோனாவால் சரிந்த மீன் விற்பனையை ஊக்குவிக்க முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி மீனை பச்சையாக கடித்து சாப்பிட்டுக்காட்டினார்.

கொரோனா அச்சத்தை போக்க மீனை பச்சையாக சாப்பிட்ட இலங்கை முன்னாள் அமைச்சர்
மீனை பச்சையாக சாப்பிடும் இலங்கை முன்னாள் அமைச்சர்
உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, மார்ச் 20 முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு பின்னர் ஊரடங்கு மூன்றில் இரண்டு பங்கிற்கு தளர்த்தப்பட்டது. இதில் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஊரடங்கு அதிக அளவில் அமல்படுத்தப்பட்டன. இதனையடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏப்ரல் 30 முதல், உள்ளூர் சமூகங்களுக்குள் இருந்து கொரோனா பாரவுவது வெகுவாக குறைந்துள்ளது.

இருப்பினும் அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீன்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ஏனெனில் மீன் மூலம் கொரோனா பரவுவதாக வெளியான செய்தியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே மீன் உணவு தொடர்பான வதந்திகளை தவிர்க்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கையின் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி மீன் உணவுகள் மீது மக்களுக்கு உள்ள பயத்தை போக்கும் வகையிலும் மீன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே ஒரு மீனை பச்சையாக சாப்பிட்டு காட்டினார்.

பின்னர் பேசிய அவர் இந்த மீனை உங்களுக்கு காண்பிப்பதற்காக நான் கொண்டு வந்தேன். இந்த மீனை சாப்பிடுமாறு நான் இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். பயப்பட வேண்டாம். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படமாட்டீர்கள் என தெரிவித்தார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!