செல்போனில் அந்த வீடியோ அழிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கிய சரண்யா..!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டியைச் சேர்ந்தவர்கள் 41 வயதான ரமேஷ் – 29 வயதான சரண்யா தம்பதி; இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

டாஸ்மாக் கடையில் ரமேஷ் பணிபுரிந்து வரும் நிலையில், விவசாயத்தை சரண்யா கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சரண்யா பிணமாக மீட்கப்பட்டார்.

விவரம் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், சடலத்தை கைப்பற்றியதுடன் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அதில், அக்டோபர் 5ம் தேதி இரவு, சரண்யாவுடன் அவரது வீட்டில், ஆயில்பட்டி அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த 29 வயதான பாலாஜி என்பவர் இருந்தது தெரியவந்தது.
அதாவது, குடும்ப மற்றும் மருத்துவ செலவுக்கு பணம் அதிகம் தேவைப்பட்டதால் நிலா என்பவரின் தையல் பயிற்சி பள்ளிக்கு சரண்யா வேலைக்கு சென்றதும், அங்கே நிலாவின் கணவரான பாலாஜியுடன் தொடர்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரியவந்ததும் பாலாஜியின் குடும்பத்தில் பிரச்சனையாக சரண்யா விலகிக்கொண்டார், இச்சூழலில் தான் சரண்யா சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பாலாஜி மது அருந்தி விட்டு தாயை அடித்ததாக சரண்யாவின் மகன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் குடும்பத்தினர், பாலாஜியை கைது செய்யுமாறு போலீசாரை வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே சரண்யாவிடம் இருந்த 2 செல்போன்களில் ஒரு செல்போனில் இருந்து அவரது ஒரே ஒரு படத்தை குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.

மேலும் அதில் பல படங்கள், வீடியோக்கள் இருந்த நிலையில், அதை அழித்தது பற்றி போலீசார் கேள்வி எழுப்பாமல் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!