வீட்டில் இதில் ஏதாவது ஒரு செடியை வளர்த்தா அதிர்ஷ்டம் கொட்டும்..!


செடி, மரம், கொடி ஆகியவை இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதம். இவை நமக்கு சுத்தமான காற்று, மழை, உணவு ஆகியவற்றைத் தருகிறது.

அதனால் வீட்டில் செடி வளர்ப்பது நல்லது. வீட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல் வீட்டுக்கு உள்ளேயும் சில செடிகளை வளர்க்கலாம்.

எல்லா செடிகளும் வீட்டுக்குள் வளராது. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு தன்மை உண்மை உண்டு. அவற்றில் ஒரு சில செடிளை மட்டுமே வீட்டினுள் வளர்க்க முடியும்.

சில செடிகளை வீட்டினில் வளர்ப்பதால், வீட்டில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தேடித் தரும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி, நேர்மறை ஆற்றல்கள் வீட்டுக்குள் தங்கும்.

அப்படி என்னென்ன செடிகளை வீட்டுக்குள் வளர்க்கலாம்?

மூங்கில்

மூங்கிலை வீட்டில் வளர்த்தால் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதனால் வீட்டில் மூங்கில் வாங்கி, வளர்க்கலாம்.

துளசி
துளசியை வீட்டில் வளர்த்து வந்தால், அன்பு, செல்வம், வீட்டின் அழகு, அதிர்ஷ்டம் ஆகியவை அதிகரிக்கும். அதோடு இந்தியப் பாரம்பரியப்படி, துளசி புனிதமான செடியாகக் கருதப்படுவதால், வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாவதோடு, செல்வம் பெருகும்.

மல்லிகை

மல்லிகையை வீட்டில் வளர்த்தால், வீட்டில் அன்பும் செல்வமும் அதிகரிக்கும். மல்லிகை மன அழுத்தத்தில் இருந்து நமக்கு விடுதலை தரும்

ரோஜா

ரோஜா என்பதே அன்பின் அடையாளம். அதனால் பல வண்ணங்களில் ரோஜா செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இது வீட்டையும் அழகுபடுத்தும். – Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!