வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்… வைரல் வீடியோ!


பிக் பாஸ் 4 தமிழ் போட்டியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது. வழக்கம் போல் இந்த சீசனும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் இன்றி பிரம்மாண்டமாக நடந்தது பிக் பாஸ் அறிமுக விழா. இந்த முறை விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தாண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் ரியோ, நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சின்னத்திரை நடிகை ஷிவானி, நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடி பில்டர் பாலா, பாடகர் வேல் முருகன், நடிகர் ஆரி, நடிகர் மற்றும் மாடலான சோம சேகர் , நடிகை கேப்ரியல்லா , நடிகை அறந்தாங்கி நிஷா , நடிகை ரம்யா பாண்டியன் , மாடல் சம்யுக்தா , நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாடகர் ஆஜித் ஆகியோர் போட்டியாளர்களாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டியாளர்கள் குத்தாட்டம் போடுகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்ஸ் ஆரம்பம் இப்படி தான் இருக்கும், போக போக தெரியும் என்பது போன்ற கமெண்ட்ஸை தெறிக்கவிட்டு வருகின்றனர்.- source: toptamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!