நமது பெயரில் ஆலயத்தில் அர்ச்சனை செய்வது நல்லதா?


கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

கோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா?
அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம். அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம். ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!