அடிக்கடி சிறுநீர் கழிப்பது கருத்தரிப்பதன் அறிகுறியா..?


சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்றின்போது எரிச்சல் உணர்வுகளோ, காய்ச்சலோ இருக்கும். அவ்வாறு இல்லாமல், சொட்டு சொட்டாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கலாம். கருத்தரிப்புக்கான ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

அவ்வப்போது சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளால் ஒன்றாகும். சில பெண்களுக்கு இது பிரசவம் வரை தொடரும். கருப்பை வளர்ந்து சிறுநீர்ப் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியிருக்கும்.

அதாவது, இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்குக் காரணமாகின்றன. கருத்தரித்த இரண்டாவது மூன்றாவது மாதங்களில் இவ்வாறு இருப்பது சாதாரணம்.


மூன்றாவது மாதத்துக்குப் பிறகு இடுப்புக்கூட்டு விளிம்புக்கு வெளியே கருப்பை வந்துவிடுவதாலும், அதிகமாக அசையக் கூடியதாக ஆவதாலும் சிறுநீர்ப்பையின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் நீங்கும்.

பொதுவாக, கருவுற்ற சுமார் இரண்டாவது மாதத்தில் சிறுநீர்ப் பையிலும் கொஞ்சம் அழற்சி ஏற்படும். இதனால், மீண்டும் அடிக்கடியும், அசௌகரியத்துடனும் சிறுநீர் கழிக்கவேண்டியிருக்கலாம்.

குழந்தை பிறந்த பன்னிரெண்டு வாரங்களுக்குப் பிறகும் இது மறையாமல் நீடிக்கும். கர்ப்பத்தின் துவக்கத்திலேயே இந்த மாற்றத்தைப் பற்றி உங்கள் அல்ட்ரா – சவுண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை.

மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல் நீங்களாக சிறுநீர்த்தாரைத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதிக் கொள்ளாதீர்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!