200 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..!


ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்க முடியாமல் தவித்த 200 மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி உள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் ரியல் ஹீரோவாக மாறியிருப்பவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்த செலவில் நூற்றுக்கணக்கான பஸ்களை ஏற்பாடு செய்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் மருத்துவ உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி என பல்வேறு உதவிகளை செய்து அசத்தினார்.

தற்போது பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கி அசத்தியுள்ளார் சோனு சூட். கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அந்தவகையில், சண்டிகரில் உள்ள அரசு பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால் பாடங்களை கற்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சோனு சூட், சுமார் 200 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து உதவி உள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!