ஆன்லைன் வகுப்பின் போது மாணவன் திடீரென விபரீத முடிவு..!


சென்னை வேளச்சேரி அருகே ஆன்லைன் வகுப்பு படித்த 14 வயது மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மேடவாக்கம் புஷ்பா நகர் வினோத் தெருவில் வசித்து வருபவர் செல்வம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் (14). செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

நேற்று மதியம் கார்த்திக்குக்கு ஆன்லைன் வகுப்பு நடந்தது. அப்போது, கார்த்தியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தார்க்ள, வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். பின்னர் பெற்றோர் மாலை வீடு திரும்பினார்கள். அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின், கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டி இருந்தது..

நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தார்கள். அப்போது, கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார்.. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் மாணவன் கார்த்திக் ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்திய பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார், தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!