உயிருடன் இருந்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை.. ஏன் தெரியுமா ?


பால் வாங்கி வர கடைக்கு போன கீர்த்தனா, அப்படியே காதலனுடன் ஓடிப்போய்விட்டார்.. இதனால் நொந்து போன அப்பா, “என் மகள் செத்து போயிட்டா” என்று கதறி அழுது, ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்.. இவர் மனைவி செல்வி.. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். 3 பேரும் பெங்களூருவில்தான் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார் ஜெயபால்.. பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவரையும் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்.

மகளுக்கு அவரை கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார். கல்யாண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு வந்துவிட்டது.. நகைகளையும் வாங்கிவிட்டார்.. பாத்திரங்களையும் ஆர்டர் செய்து வாங்கிவிட்டார்.. எல்லாருக்கும் பத்திரிகை தந்து அழைத்து வந்தார்.

கடந்த புதன்கிழமைதான் கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.. ஆனால், சனிக்கிழமை அன்று பால் வாங்கி வருகிறேன் என்றுசொல்லிவிட்டு, கடைக்கு போனார் கீர்த்தனா.. அவ்வளவுதான்.. திரும்பி வரவே இல்லை.. பொண்ணை காணோம் என்று பல இடங்களில் தேடினர்.

அப்போதுதான், மகள், இன்னொரு பையனுடன் ஓடிவிட்டது தெரியவந்தது.. இதை கேள்விப்பட்டதும் ஜெயபால் அதிர்ந்துவிட்டார். போலீசார் கீர்த்தனாவையும், அந்த இளைஞனையும் பிடித்து விசாரித்தனர்.. 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டதாக போலீசில் சொன்னார்கள்.

இதை கேட்டதும் ஜெயபால் இன்னும் ஷாக் ஆனார்.. என் பொண்ணு செத்து போய்ட்டாள் என்று அங்கேயே கதறி சொன்னார்.. அப்போதும் ஆவேசம் அடங்காத ஜெயபால், ஊர் முழுவதும், கீர்த்தனாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்.. மகள் உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தை போஸ்டர் ஒட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!