மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள்… ஈரானுக்கு டிரம்ப் கோரிக்கை..!


மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு பொருளாதாரத்தைச் சரியாக எதிர்கொள்ளாத அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய் (வயது 27) கலந்து கொண்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் நவிட் அப்கராயுக்கு மரண தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் மல்யுத்த வீரர் நவிட் அப்கராயுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஈரானில் ஒரு சிறந்த மற்றும் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான நவிட் அப்கராயுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈரான் தலைவர்களே, அந்த இளைஞனின் வாழ்க்கையை நீங்கள் காப்பாற்றினால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றவில்லை என்றால் நான் உங்களை வெகுவாக பாராட்டுவேன். நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!