குழந்தை வரம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்..!


கிருஷ்ண ஜெயந்தி அன்று, காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, உங்களது விரதத்தை தொடங்கலாம்.

குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், தம்பதி சரீரமாக விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. பண்டிகை தினம் என்றால், முந்தைய நாளே, நம் வீட்டை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று, காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, உங்களது விரதத்தை தொடங்கலாம். விரதம் இருப்பது என்பது, உங்கள் உடல் நிலத்தை பொறுத்து. உங்களது விரதத்தை, உங்கள் இஷ்டப்படி அமைத்துக் கொள்வது சிறந்தது.

குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், உங்களுடைய வீட்டில் சிறிய தொட்டிலில், கிருஷ்ணர் அமர்ந்திருப்பது போல உருவம் கொண்ட பொம்மையை வாங்கி வைத்து, கிருஷ்ணரின் பாதங்களை போட்டு, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பால், வெண்ணை, தயிர், அவல் கேசரி, முறுக்கு, சீடை நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்களை படைத்து, கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து, விசேஷமாக இந்த பூஜையை செய்தால், அடுத்த வருடமே உங்கள் வீட்டில் குட்டி கண்ணனோ, குட்டி ராதையோ தவழ்ந்து வருவார்கள் என்பது ஐதீகம்.

இந்த வருடம் லாக் டவுனில் இருப்பதால், எல்லோராலும் இந்த கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம்தான்! இருப்பினும், நம் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை என்றாலும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணை, அவல் கேசரியை மட்டுமாவது, நைவேத்தியமாகப் படைத்து, உண்மையான பக்தியோடு நம்முடைய வீட்டில் வழிபாட்டை செய்து முடிக்கலாம்.

இந்த வருடம் விரதம் இருந்து, அடுத்த வருடம் உங்கள் வீட்டில் செல்ல கண்ணனோ, செல்ல ராதையோ, வந்து விட்டால் அவர்களுடைய, திருப்பாதங்களை வைத்து, கிருஷ்ணனை உங்கள் வீட்டுக்குள்ளேயே அழைத்து, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது மிகவும் விசேஷமானது. உங்களால் முடிந்தால், கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ணருக்கு செய்த பலகாரங்களை, உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. குறிப்பாக, ஆதரவு இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்த பிரசாதத்தை கொடுப்பது என்பது,

நேரடியாக அந்த கிருஷ்ணருக்கே நெய்வேதியம் படைத்த பலனை நமக்குத் தரும். இவை எல்லாவற்றையும் விட, நாம் எந்த ஒரு பண்டிகையை, நம் வீட்டில் கொண்டாடினாலும், ‘நான்’ என்ற அகந்தையையும், தன்னலம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களையும், இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து, சுயநலமற்ற மனதோடு, நம்முடைய பூஜையை நிறைவு செய்வதே சிறப்பான பூஜை! என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!