வாக்கிங் போன இந்திய பெண்ணை கொடூரமாக கொன்ற கும்பல்..!


இனவெறி முடிஞ்சி, அடுத்து கொலைவெறி ஆரம்பமாகி உள்ளது.. அமெரிக்காவில் இந்திய பெண்ணை படுமோசமாக கொன்றுள்ளனர்.. ஜாக்கிங் போனவரை ஏன் கொன்றார்கள் என தெரியவில்லை..இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சர்மிஸ்தா சென்.. இவருக்கு வயது 43 ஆகிறது.. அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் இந்த பெண்.. ஜாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் இவரை கொன்றுவிட்டனர்.. பலமுறை தாக்கப்பட்டு அதன்பிறகே சென் உயிர் பிரிந்திருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், சின்ந்திரியை சேர்ந்தவர் இவர்.. கல்யாணத்துக்கு பின் அமெரிக்காவின் பிளானோ பகுதிக்கு சென்று குடியேறினார்… இவர் ஒரு மருந்து தயாரிப்பாளர்.. ஆராய்ச்சியாளரும்கூட.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. கடந்த 1-ம்தேதி வாக்கிங் போனவர் வீட்டுக்கு வரவே இல்லை.. அதன்பிறகுதான் சிஸ்லோம் டிரையல் பார்க் அருகே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தொடர்ந்து பலமுறை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொலை நடந்த அதே நேரத்தில் அந்த பகுதியில் ஒரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனால் சென் கொலைக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்… இனவெறிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் குற்றம் அதிகரித்து வருவதால் சென் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்து வருகின்றது.

அதனாலேயே இப்போது அமெரிக்காவில் போலீசுக்கு எதிராக கொலை ,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தும் வருகின்றன.. இறந்த பெண் ஆராய்ச்சியாளர் போட்டோவை வைத்து ,சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜாகிங் ஷூ க்களை வைத்து அந்த பகுதியினர் அஞ்சலி செலுத்தியது காண்போரை உருக செய்தது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயாளிகளுடன் ஒரு ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்த சென்னின் ம்ரணம் தங்களுக்கு பேரிழப்பு என்று உடன் பணியாற்றுவோர் கண்கலங்கி கூறுகிறார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!