15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து என்ஜினீயரிங் மாணவருக்கு நடந்த சோகம்..!


கள்ளிக்குப்பம் ஏரிக்கரையில் பூங்கா அமைக்க தோண்டிய 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்(வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கள்ளிக்குப்பத்தில் உள்ள 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரியை சுற்றிலும் கரையோரத்தில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஏரி பகுதிக்கு சென்ற சஞ்சய், கால் வழுக்கி பூங்கா அமைக்க தோண்டிய 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துவிட்டதாக தெரிகிறது. அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தால் அவர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பள்ளத்தில் விழுந்த சஞ்சய் உடலை தேடினர். இருட்டி விட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவியுடன் செல்போன் ‘டார்ச்’ வெளிச்சத்தில் பள்ளத்தில் விழுந்த சஞ்சய் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையில் சஞ்சய், பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை பள்ளத்தில் தள்ளி விட்டனரா? என விசாரித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!