புதுப்பெண் சர்ச்சை மரணம்… நெஞ்சைப் பதற வைத்த காரணம்..!


பாலாஜி என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர். இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்த் சி.பி.ஐ.எம் மாதர் சங்க தலைவியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர்களது செந்தாமரை( வயது 23) என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடித்துள்ளது.

இந்நிலையில், இன்று செந்தாமரை உத்திரமேரூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது, வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக செந்தாமரையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரகசியமாக காவல் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்துள்ளனர். மேலும், இதுபற்றிய தகவல் காவல் துறையினருக்கு கிடைக்க சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, செந்தாமரையின் உறவினர்கள், செந்தாமரை சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், செந்தாமரை வேறொருவரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, செந்தாமரையை சமாதானம் செய்து மற்றொரு திருமணம் செய்துள்ளனர். இதனால், செந்தாமரை மனமுடைந்து காணப்பட்ட நிலையில், சுதந்திரமாக வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும், இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என்றும், செந்தாமரையின் பெற்றோர்கள் இதனை விபத்து மரணம் என்று கூறுகின்றனர். மேலும், இது, கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!