முன்னாள் நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவுக்கு கொரோனாவா..?


மாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி. ஆன சுமலதா, முன்னாள் நடிகையும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

இதற்கிடையே, மாண்டியா தொகுதியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பணிபுரிந்து வந்தார் சுமலதா.

இந்நிலையில், முன்னாள் நடிகையும், எம்.பி.யுமான சுமலதா, தனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வீட்டுத் தனிமையில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!