தினமும் 24 கி.மீட்டர் சென்று படித்த 10-ம் வகுப்பு மாணவி செய்த சாதனை!


மத்திய பிரதேச மாநிலத்தில் ரோஷ்மி என்ற மாணவி தினந்தோறும் 24 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று 10-ம் வகுப்பு படித்ததுடன், 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் அஜ்னால். இந்த கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா என்ற 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் பள்ளிக்கூடம் இல்லாததால் 24 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

படிப்பதற்காக ரோஷினி மனம் தளராமல் தினந்தோறும் 24 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று பாடம் கற்று வந்தார். நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ரோஷினி 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்று 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

கடின உழைப்பிற்கு ஊதியம் நிச்சயம் உண்டு என்பதற்கு ரோஷினி உதாரணமாக திகழந்துள்ளார். இதுகுறித்து அந்த சாதனை மாணவி கூறுகையில் ‘‘அரசு கொடுத்த சைக்கிள் மூலம் நான் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்தேன். தினமும் நான்கரை மணி நேரம் படிப்பேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!