தங்கத்தில் முக கவசம் – குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா…?


உங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது அதனால்தான் இப்படி செய்கிறீர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி சாடி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பருத்தி துணியிலான முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவம் ஆடுகிற மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அதை அணிந்து கொண்டிருக்கிறார். இந்த தங்க முக கவசம், கொரோனா தொற்றில் இருந்து அவரை காக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது. அதனால்தான் இப்படி செய்கிறீர்கள்” என சாடி உள்ளார். அத்துடன் சங்கர் தங்க முக கவசம் அணிந்து தோன்றும் படத்தையும் உமர் அப்துல்லா டுவிட்டரில் இணைத்திருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!